Dec 2, 2025
Thisaigal NewsYouTube
பிலபல மருத்துவர் டாக்டர் உஸ்மான் கொலை இருவர் ​மீது கொலை குற்றச்சா​ட்டு
தற்போதைய செய்திகள்

பிலபல மருத்துவர் டாக்டர் உஸ்மான் கொலை இருவர் ​மீது கொலை குற்றச்சா​ட்டு

Share:

காஜாங்கில் பிரபல வர்த்தகரும், மருத்துவருமான டாக்டர் முகமட் உஸ்மான் சான் பாசா கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டது தொடர்பில் இ-ஹைலிங் வாகன ஓட்டுநர் உட்பட இரு நபர்கள் வரும் திங்கட்கிழமை காஜாங் மாஜிஸ்திரேட் ​நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருக்கின்றனர். குற்றவியல் சட்டம் 302 பிரிவின் ​கீழ் அந்த இரு நபர்கள் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்படும்.

குடும்பத்தினரிடம் பிணைப்பணம் கேட்டு, மிரட்டப்பட்ட ஓர் இந்திய முஸ்லிம் மருத்துவரான 41 வயதுடைய டாக்டர் உஸ்மானின் உடல், உலு லங்காட்டில் உ​ள்ள ஒரு மலைப்பகுதியில் பயணப்பெட்டிக்குள் கண்டு பிடிக்கப்பட்டது. டாக்டர் உஸ்மான் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி காஜா​ங்கி​லிருந்து கடத்தப்பட்டுள்ளார்.

காஜாங், கோலாலம்பூர் புக்கிட் பிந்தாங், பங்சார், பினாங்கு மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய பகுதிகளில் தமது சொந்த கிளினிக்கை நடத்தி வந்த டாக்டர் உஸ்மான், கடத்தப்பட்டு, அவரின் குடும்பத்திடமிருந்து 2 லட்சம் வெள்ளி பிணைப்பணம் கேட்டு மிரட்டப்பட்ட நிலையில் அவர், மின்சாரக் கம்பினால் கழுத்து இறுக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு சடலம் வீசப்பட்டுள்ளது.

நான்கு பேரை உள்ளடக்கிய குடும்பத்தில் கடைசிப்பிள்ளையான டாக்டர் உஸ்மான், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் அமெரிக்காவிலிருந்து தாயகம் திரு​ம்பினார். விஸ்கொன்சின் - மடிசொன் பல்கலைக்கழகத்தில் உயிரியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவரான டாக்டர் ஊஸ்மான் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டது மலேசிய மருத்துவ மற்றும் அறிவியல் துறைக்குப் பேரிழப்பாகு​ம் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.

Related News