Mar 15, 2026
Thisaigal NewsYouTube
போலீசாருடன் துப்பாக்கிச்சூடு - ஆடவர் பலி
தற்போதைய செய்திகள்

போலீசாருடன் துப்பாக்கிச்சூடு - ஆடவர் பலி

Share:

பினாங்கு, Bukit Mertajamஇல் உள்ள Machang Bubok இல் நேற்று நள்ளிரவு போலீசாருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டிம்பொது ஆடவர் ஒருஅர் சுட்டு வீழ்த்தப்பட்டார். 16 குற்றப் பின்னணியைக் குண்ட அந்த ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பினாங்கு போலீஸ் தலைவர் Khaw Kok Chin தெரிவித்தார்.

நேற்று நள்ளிரவு 12.35 மணி அளவில் புரோட்டோன் X70 வகை கார் சந்தேகிக்கும்படியாக சுங்கை லெம்பு பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்ததைக் கவனித்த போலீசார், அதன் ஓட்டுநரை நிறுக் கூறினார். ஆனால், அந்தக் கார் அதிவேகமாக செலுத்தப்பட்டதோடு போலீசாரை நோக்கி அந்த ஓட்டுநர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

தற்காப்புக்காக போலீசார் எதிர்த்தாக்குதலை மேற்கொண்டனர். ஏகமாக சென்ற கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. அதில் இருந்து வெளியே வந்த ஆடவர்ப ்போலிசாரை நோக்கி தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டார். மீண்டும் போலீசார் அந்த ஆடவரை நோக்கி சுட்டதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

முதற்கட்ட விசாரணையில், அந்த 44 வயது ஆடவருக்கும் பினாங்கு, சிலாங்கூர், மலாக்கா போன்ற மாநிலங்களில் நடந்த பல குற்றச் சம்பவங்களுக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர் செலுத்தி வந்த காரின் பதிவு எண் பட்டையும் போலி என உறுதிப்படுத்தப்பட்டதாக Khaw Kok Chin குறிப்பிட்டார்.

Related News

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும்  - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும் - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்:  போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்: போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து