Dec 4, 2025
Thisaigal NewsYouTube
பிரதமரை விமர்சிப்பதா? உதவி போலீஸ் பெண் கைது
தற்போதைய செய்திகள்

பிரதமரை விமர்சிப்பதா? உதவி போலீஸ் பெண் கைது

Share:

தனது முகநூலில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை அநாகரிகமாக விமர்சித்து, கருத்து பதிவேற்றம் செய்துள்ளதாக கூறப்படும் பெண் உதவி போலீஸ்காரர் ஒருவரை ஜோகூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த பதிவேற்றத்தை கண்ட மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் நேற்று வியாழக்கிழமை இரவு 10.22 மணியளவில் செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து அந்தப் பெண் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ கமருல் ஜமான் மாமத் தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு தலைமையேற்றுள்ள பிரதமரை அவமதிக்கும் வகையில் தீய நோக்குடன் அந்த பெண் உதவி போலீஸ்காரர், ஓர் இடுகையை தனது முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளதாக கமருல் ஜமான் குறிப்பிட்டார்.

அப்பெண் மெர்சிங்கில் ஒரு உதவி போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று கமருல் ஜமான் மேலும் தெரிவித்தார்.

Related News