புத்ராஜெயா, ஆகஸ்ட்.20-
பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து தம்முடைய வெளிநாட்டுப் பயணத்திற்கு நிதியளிக்க லஞ்சம் கேட்டு நிதியுதவி பெற்றதாகச் சந்தேகத்தின் பேரில் அரசாங்க இலாகா ஒன்றின் உதவி தலைமை இயக்குநர் ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது.
இன்று காலையில் புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அந்த தலைமை உதவி இயக்குநரை விசாரணைக்கு ஏதுவாக வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்குத் தடுத்து வைப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
முன்னதாக 40 வயது மதிக்கத்தக்க அந்த தலைமை உதவி இயக்குநர் நேற்று மாலை 6.30 மணிக்கு புத்ராஜெயாவில் உள்ள எஸ்பிஆர்எம் தலைமையகத்திற்கு வாக்குமூலம் அளிப்பதற்கு அழைக்கப்பட்டிருந்த போது அவர் கைது செய்யப்பட்டார்.
துபாய் ஆர்க்கிட் ஏற்றுமதி விவசாயத் திட்டம் தொடர்பாக 2023 ஆம் ஆண்டு மார்ச் முதல் 2025 ஆம் ஜனவரி வரை வெளிநாடுகளில் உள்ள பல இடங்களுக்குச் செல்வதற்கு அந்தத் தலைமை உதவி இயக்குநர் பல நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடம் நிதி உதவி என்ற பேரில் லஞ்சம் கேட்டுப் பெற்றுள்ளதாக பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று எஸ்பிஆர்எம் வட்டரங்கள் தெரிவித்தன.








