Oct 9, 2026
Thisaigal NewsYouTube

இரவோடு இரவாக ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் ! – வன்முறையை உடனடியாக நிறுத்த வேண்டும் ! - மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் வலியுறுத்து

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இரவோடு இரவாக ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் ! – வன்முறையை உடனடியாக நிறுத்த வேண்டும் ! - மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் வலியுறுத்து

கோலாலம்பூர், ஜூன்.22-

இரவோடு இரவாக ஈரானின் மூன்று அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரித்து வரும் மோதல் குறித்துப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் கவலை தெரிவித்தார். இஸ்ரேல் பிற நாடுகளுக்கு எதிராக சினமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருக்க அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்று அன்வார் வலியுறுத்தினார்.

காஸாவில் பெண்களும் குழந்தைகளும் கொல்லப்படுவதுடன், இஸ்ரேல் இப்போது ஈரானைத் தாக்குவது நிலைமையை மேலும் மோசமாக்குகிறது என்றார். Hormuz நீரிணை மூடப்பட்டால் உலகப் பொருளாதாரத்தில் ஏற்படும் பெரும் பாதிப்பு குறித்தும் பிரதமர் அன்வார் எச்சரித்தார். "மனித உயிர்களும் நீதியும் மிக முக்கியம். வன்முறையை உடனடியாக நிறுத்துங்கள்" என்று கூறி, ஈரானின் பதிலடியைத் தடுக்க முயற்சிக்கும் அதே வேளையில் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு ஏன் அனுமதிக்கப்படுகிறது என்று கேள்வி எழுப்பினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →