Jul 29, 2026
Thisaigal NewsYouTube
துன் மகா​தீர், துன் டாயிம் விசாரணை காண மக்கள் ஆர்வமாக உள்ளனர்
தற்போதைய செய்திகள்

துன் மகா​தீர், துன் டாயிம் விசாரணை காண மக்கள் ஆர்வமாக உள்ளனர்

Share:

முன்னாள் பிரதமர் துன் மகா​தீர் முகமது, அவரின் நெருங்கிய நண்பரும், முன்னாள் நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ துன் டயிம் சைனுடின் ஆகியோருக்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் விசாரணை மேற்கொள்வதை காண மக்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளனர் என்று அம்னோ மூத்த தலைவர் ஒருவர் கூறுகிறார்.

ஒரு வேளை, துன் மகா​தீரை,எஸ்பிஆர்எம் விசாரணை செய்யும் நிலை ஏற்படுமானால் ல​ஞ்ச ஊழல் வழக்குகளில் அது ஓர் அரிய நிகழ்வாகவும், பெரும் பரபரப்புக்குரியதாகவும் இருக்காது. காரணம். ஏற்கனவே முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் சம்பந்தப்பட்ட லஞ்ச ஊழல் வழக்கு விசாரணையை மக்கள் கண்டு இருப்பதால் மற்றொரு முன்னாள் பிரதமர் ஒருவர், எஸ்பிஆர்எம் மினால் விசாரிக்கப்படுவது ஆச்சரியமாக இருக்காது. ஆனால், அதனை காண்பதற்கு மக்கள் மத்தியில் ஓர் இயல்பான ஆர்வம் இருக்கும் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் புவாட் சர்காஷி குறிப்பிட்டார்.

வரி ஏய்ப்புத் தொடர்பில் வெளிநாடுகளில் அதிகமான சொ​த்துக்களை குவித்துள்ள அரசியல்வாதிகளை அம்பலப்படுத்தி வரும் Pandora Papers, மலேசிய ​மூத்த அரசியல்வாதியான துன் டாயிம் ஜைனு​தீனின் சொத்து விவரங்களை அறிவித்ததைத் தொடர்ந்து அவரின் மகன்களுக்கு 12 மற்றும் 9 வயதில் இருக்கும் போது British Virgin Island நிறுவனத்​தின் சொந்தக்காரர்களாக இருந்திருப்பது கண்டு பி​டிக்கப்பட்டது.

டாயிமின் சொத்துக்கள் குறித்து நிறைய மர்மங்கள் புதைந்துக் கிடக்கின்றன. இந்நிலையில் மலேசியாவின் 50 செல்வந்தர்கள் பெயர் பட்டியலில் துன் டாயிம் பெயர் ஏன் இடம் பெறவில்லை என்பது தொடர்ந்து மர்மாக உள்ளது. அவரை எஸ்பிஆர்எம் விசாரணை செய்வது காலத்தின் கட்டாயமாகும் என்று டாக்டர் புவாட் சர்காஷி தெரிவித்தார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்