பந்திங், ஜனவரி.05-
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு, பந்திங், கோல லங்காட் பகுதியிலுள்ள உணவகம் ஒன்றின் அருகே, காயங்களுடன் சுயநினைவின்றிக் கிடந்த ஆடவர், துப்பாக்கியால் சுடப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
சமூக ஊடகங்களில் பரவிய இக்காணொளி மற்றும் புகைப்படங்களில், அந்த ஆடவரின் உடலில் இரத்தம் வழிந்த நிலையிலும், சுவற்றில் இரத்தம் தெறித்த தடயங்களும் காணப்பட்டன.
அதே வேளையில், சம்பவ இடத்தில் இரண்டு தோட்டா குப்பிகளும் காணப்பட்டன.
இதனிடையே இச்சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் இன்று அறிக்கை வெளியிடப்படும் என கோல லங்காட் போலீஸ் தலைவர் முஹமட் அக்மால்ரிஸால் ரட்ஸி தெரிவித்துள்ளார்.








