கோல சிலாங்கூர், ஜூலை.30-
கேஸ்ட்ரிக் வலி என்று கூறி சிகிச்சைப் பெறுவதற்கு தஞ்சோங் காராங் அரசு மருத்துவமனைக்குச் சென்ற 17 வயது பெண், சொந்த தந்தையால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானது அம்பலமானது.
இச்சம்பவம் தொடர்பாக கடந்த திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் தஞ்சோங் காராங் மருத்துவமனையிலிருந்து அவசர அழைப்பைப் பெற்ற போலீசாருக்கு, சம்பந்தப்பட்ட பெண், சொந்த தந்தையால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகியிருப்பது தெரிய வந்தது என்று கோல சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் அஸாஹாருடின் தஜுடின் தெரிவித்தார்.
இதன் தொடர்பில் கோல சிலாங்கூர், பெஸ்தாரி ஜெயாவில் அன்றைய தினமே அந்தப் பெண்ணின் 51 வயது தந்தையைப் போலீசார் கைது செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மருத்துவப் பரிசோதனையின் போது, தமது தந்தையின் பாலியல் கொடுமைக்கு ஆளாகி வரும் விஷயத்தை அந்தப் பெண் மருத்துவரிடம் தெரிவித்து இருப்பதாக அவர் விளக்கினார்.








