Dec 4, 2025
Thisaigal NewsYouTube
மலேசியா, இலங்கை உறவுகளை வலுப்படுத்த ஒப்புதல்
தற்போதைய செய்திகள்

மலேசியா, இலங்கை உறவுகளை வலுப்படுத்த ஒப்புதல்

Share:

மலேசியாவும் இலங்கையும் பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த ஒப்புக் கொண்டுள்ளன.

நியூயோர்க்கில் இன்று இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த போது இவ்விவகாரம் கலந்து பேசப்பட்டதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

தங்களின் சந்திப்பில், பரஸ்பர நலன்களுக்காக பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த தாங்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக அன்வார் குறிப்பிடுள்ளார்.

வர்த்தகம், முதலீடு, கல்வி, சுற்றுலா, கலாச்சாரம், மனித வள மேம்பாடு, ஆகியவை அந்த கருத்து பரிமாற்றங்களில் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

நியூயோர்க்கில் நடைபெற்று வரும் ஐ.நா. பொதுப் பேரவையின் 78 ஆவது மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பிரதமர் அன்வார், உலகத் தலைவர்களை சந்தித்து வருகிறார்.

Related News