May 21, 2026
Thisaigal NewsYouTube
கோவிட் 19, வெள்ளம் தாம் சந்தித்த மிகப்பெரிய சவாலாகும்
தற்போதைய செய்திகள்

கோவிட் 19, வெள்ளம் தாம் சந்தித்த மிகப்பெரிய சவாலாகும்

Share:

1997 ஆம் ஆண்டில் எவரெட்ஸ் சிகரத்தில் கால்பதித்து, மலேசியாவின் ஜாலோர் கெமிலாங் கொடியை பறக்க விட்டு, நாட்டிற்கு பெருமை சேர்த்தவர்கள் டத்தோ எம். மகேந்திரன் மற்றும் டத்தோ மோகனதாஸ் என்பது வரலாறாகும்.

அந்த வரலாற்று நாயகர்களில் ஒருவரான டத்தோ மகேந்திரன், தாம் நேசித்த ஆசிரியர் துறையில், தலைமை ஆசிரியர் பொறுப்பிலிருந்து கடந்த டிசம்பர் 6 ஆம் தேதி பணி ஓய்வுப்ற்றார்.

ஷா ஆலாம், ஶ்ரீ மூடா இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராக கடந்த 2020 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற டத்தோ மகேந்திரன், நான்கு ஆண்டு கால சேவைக்கு பின்னர் பணி ஓய்வுப்பெற்றதையொட்டி பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும் இணைந்து மிகச்சிறப்பான முறையில் இமயம் வென்ற அந்த நாயகருக்கு பிரியா விடை நல்கி, சிறப்பித்தனர். .

கடந்த 35 ஆண்டு காலமாக ஆசிரியர் துறையில் பணியாற்றிய டத்தோ மகேந்திரன், கடந்த 2020 ஆம் ஆண்டு, ஷா ஆலாம், ஶ்ரீ முடா இடைநிலைப்பள்ளியின் தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்ற போது, இரண்டு மிகப்பெரிய சாவால்களை எதிர்நோக்கியது மறக்க முடியாது என்கிறார்.
ஒன்று, 2020 இல் நாட்டை உலுக்கிய கோவிட் 19, மற்றொன்று, 2021 இல் ஷா ஆலம் மாநகரை சூழ்ந்த வரலாறு காணாத வெள்ளமாகும் என்று நினைவுகூர்ந்தார் டத்தோ மகேந்திரன்.

எனினும் அரசாங்கத்தின் ஆதரவு, தனியார் துறையின் உதவிக் கரம் பொது மக்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒத்துழைப்பு ஆகியவற்றினால் இந்த இரண்டு பெரும் சவால்களையும் சமாளிக்க முடிந்ததாக டத்தோ மகேந்திரன் தமது அனுபவத்தை மேற்கண்டவாறு விவரித்தார்.

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

கோவிட் 19, வெள்ளம் தாம் சந்தித்த மிகப்பெரிய சவாலாகும் | Thisaigal News