May 4, 2026
Thisaigal NewsYouTube
மாற்றுத் திறனாளி மாணவிக்குப் பாலியல் வன்கொடுமை: 13 வயது மாணவன் குற்றத்தை ஒப்புக் கொண்டார்
தற்போதைய செய்திகள்

மாற்றுத் திறனாளி மாணவிக்குப் பாலியல் வன்கொடுமை: 13 வயது மாணவன் குற்றத்தை ஒப்புக் கொண்டார்

Share:

பத்து பஹாட், பிப்ரவரி.23-

பள்ளி வகுப்பறையில் மாற்றுத் திறனாளி மாணவி ஒருவருக்குப் பாலியல் வன்கொடுமை இழைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட முதலாம் படிவம் பயிலும் 13 வயது மாணவன், இன்று பத்து பஹாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

மாஜிஸ்திரேட் அருண் நோவல் தாஸ் முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்த மாணவன், கடந்த ஜனவரி 29-ஆம் தேதி நண்பகல் 12 மணியளவில், ஒரு இடைநிலைப்பள்ளியின் வகுப்பறையில் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் 16 வயதுடைய மாற்றுத் திறனாளி மாணவியிடம் தகாத செயலில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

அந்தச் சிறுவன் மீது 2017-ஆம் ஆண்டின் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டத்தின் பிரிவு 14 -ன் கீழ் வழக்குப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

Related News

மாற்றுத் திறனாளி மாணவிக்குப் பாலியல் வன்கொடுமை: 13 வயது ம... | Thisaigal News