Oct 1, 2026
Thisaigal NewsYouTube

கோலா பிலா மாணவர் மரணம்: சந்தேக நபரால் துன்புறுத்தப்பட்டதாக 5 மாணவர்கள் வாக்குமூலம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கோலா பிலா மாணவர் மரணம்: சந்தேக நபரால் துன்புறுத்தப்பட்டதாக 5 மாணவர்கள் வாக்குமூலம்

கடந்த வெள்ளிக்கிழமை கோலா பிலாவில் இரண்டாம் படிவ மாணவர் ஒருவர் பகடிவதை காரணமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட முதல் சந்தேக நபர் மீது, மேலும் ஐந்து மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தாங்கள் ஐவரும், முதல் சந்தேக நபரால் பகடிவதை செய்யப்பட்டதாக போலீஸ் விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 69 பேரிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில், நடத்தப்பட்ட மேலதிக விசாரணையில், இந்தத் தகவல் தெரிய வந்ததாக நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் உதவி ஆணையர் டத்தோ அல்ஸாஃப்னி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 16 வயதுடைய இரு ஆண் சந்தேக நபர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், புதிதாக எவரும் கைது செய்யப்படவில்லை.

இருவரும் குற்றவியல் சட்டம் பிரிவு 302-ன் கீழ் நடைபெறும் விசாரணைக்கு உதவுவதற்காக, ஒருவரை அக்டோபர் 1-ஆம் தேதி வரையும் மற்றொருவரை அக்டோபர் 3-ஆம் தேதி வரையும் தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →