Jul 29, 2026
Thisaigal NewsYouTube
விரைவு பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் நால்வர் படுங்காயம்
தற்போதைய செய்திகள்

விரைவு பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் நால்வர் படுங்காயம்

Share:

லஹாட் டத்து, ஜூன் 21-

சபா, பத்து 9 ஜாலான் சிலம் என்ற இடத்தில் விரைவு பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் நான்கு பேர் படுங்காயம் அடைந்துள்ளனர்.

செம்போர்னா -விலிருந்து கோத்தா கினபாலு -விற்கு 16 பயணிகள், இரண்டு ஓட்டுநர்கள் உட்பட ஒரு பேருந்து நடத்துநர் என மொத்தம் 19 பேரை ஏற்றிச் சென்ற அப்பேருந்து விபத்துக்குள்ளாகியதாக லஹாட் டத்து தீயணைப்பு, மீட்பு நிலையத்தின் தலைவர் சும்சோ ரஷீத் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட பேருந்து 50 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததாகவும் அதிர்ஷ்டவசமாக சிலர் அப்பேருந்திலிருந்து தானாகவே வெளியேற முயற்சித்ததாகவும் சும்சோ ரஷீத் கூறினார்.

விபத்தில் காயமுற்ற நான்கு பேரும் லஹாட் டத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள வேளை, இச்சம்பவம் ஏற்பட்ட காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக சும்சோ ரஷீத் மேலும் குறிப்பிட்டார்.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்