Oct 2, 2026
Thisaigal NewsYouTube

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காவற்படை அதிகாரி: 3 நாட்களுக்குப் பின் சடலம் மீட்பு!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காவற்படை அதிகாரி: 3 நாட்களுக்குப் பின் சடலம் மீட்பு!

சிப்பாங், நவம்பர்.30-

சிப்பாங், Kampung Gichingஇல் ஏற்பட்ட வெள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் போன 23 வயது நீலாய் மாவட்டக் காவற்படை அதிகாரி முகமட் ரஹிமி அமிருடின் சடலமாக இன்று காலை 7.30 மணியளவில் கண்டெடுக்கப்பட்டார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணியளவில் பணிக்குச் சென்று கொண்டிருந்த போது, அவரின் பெரோடூவா பெஸ்ஸா கார் வெள்ளம் சூழ்ந்த வடிகால் பள்ளத்தில் கவிழ்ந்ததாக சிப்பாங் மாவட்டக் காவற்படைத் தலைவர் உதவி ஆணையர் நோர்ஹிஸாம் பஹாமான் தெரிவித்தார்.

வெள்ளத்தில் மூழ்காமல் இருக்கச் சாலைப் பலகையைப் பிடித்துத் தப்பிக்க முயன்ற அவர், நீரின் வேகமான பிடியில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டதைக் கண்ட சாட்சிகள் தெரிவித்தனர். தொடர்ந்து பல மணி நேரம் தேடுதலும், மீட்புப் பணிகளும் தீவிரமாக நடந்த நிலையில், வெள்ள நீரின் வேகத்தில் இழுத்துச் செல்லப்பட்ட அவரின் சடலம், அவரது வாகனத்திலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் மீட்கப்பட்டதாகச் சிலாங்கூர் தீயணைப்பு-மீட்புப் படையின் செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
துன் மகாதீருக்கு துக்கத்தில் இருந்து மீள சற்று அவகாசம் தேவை – முக்ரிஸ்

துன் மகாதீருக்கு துக்கத்தில் இருந்து மீள சற்று அவகாசம் தேவை – முக்ரிஸ்

55 மலேசியர்கள் மாயமான நேபாள வெள்ளம்: ஒருவர் 37 நாட்களுக்குப் பின் பாதுகாப்பாக நாடு திரும்பினார்

55 மலேசியர்கள் மாயமான நேபாள வெள்ளம்: ஒருவர் 37 நாட்களுக்குப் பின் பாதுகாப்பாக நாடு திரும்பினார்

பாலஸ்தீனியர் கடத்தல் வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட 8 பேரில் ஒருவருக்கு கைது ஆணை

பாலஸ்தீனியர் கடத்தல் வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட 8 பேரில் ஒருவருக்கு கைது ஆணை

கோலாலம்பூரில் களைகட்டியது F1 பந்தயம்: 365 போலீசார் களத்தில் குவிப்பு, 9,000 வாகனங்களுக்கு நிறுத்தும் வசதி

கோலாலம்பூரில் களைகட்டியது F1 பந்தயம்: 365 போலீசார் களத்தில் குவிப்பு, 9,000 வாகனங்களுக்கு நிறுத்தும் வசதி

2-வது இடத்தில் மலேசியக் கடப்பிதழ்: உலக நாடுகளின் நம்பகத்தன்மையைப் பிரதிபலிப்பதாக உள்துறை அமைச்சு தகவல்

2-வது இடத்தில் மலேசியக் கடப்பிதழ்: உலக நாடுகளின் நம்பகத்தன்மையைப் பிரதிபலிப்பதாக உள்துறை அமைச்சு தகவல்

தம்புன் அருகே பரிதாபம்: சாலை விபத்தில் 2 பள்ளி மாணவிகள் பலி; ஒருவர் படுகாயம்

தம்புன் அருகே பரிதாபம்: சாலை விபத்தில் 2 பள்ளி மாணவிகள் பலி; ஒருவர் படுகாயம்