சித்தி ஹஸ்மாவின் இறுதி அஞ்சலி நிகழ்வின்போது துன் டாக்டர் மகாதீர் முகமதுவின் துயரக் காட்சிகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் மாற்றியமைத்து வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ குறித்து எம்.சி.எம்.சி. விசாரணை நடத்தி வருகிறது.
சமூக ஊடகங்களில் பரவிய அந்த வீடியோவில், சித்தி ஹஸ்மாவின் உடலுக்கு முன்பாக பெண் ஒருவர் நடனமாடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட சமூக ஊடகத் தளங்களையும் தொடர்பு கொண்டுள்ளதாக எம்.சி.எம்.சி. தெரிவித்துள்ளது.
உண்மையான காட்சிகளை மாற்றியமைப்பது மக்களைத் தவறாக வழிநடத்துவதுடன், சம்பவத்தின் உண்மையான பின்னணியையும் சிதைத்து, தனிநபர் மற்றும் குடும்பத்தின் கண்ணியத்தைப் பாதிக்கக்கூடும் என அது எச்சரித்துள்ளது.
சட்டமீறல் இருப்பது விசாரணையில் தெரிய வந்தால், 1998ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் எம்.சி.எம்.சி. தெரிவித்துள்ளது.








