புத்ராஜெயா, செப்டம்பர்.24-
பூடி 95 திட்டத்தின் கீழ் பெட்ரோல் ரோன்95 எரிபொருள், லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 99 காசுக்கு வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படவிருக்கும் வேளையில் வாகனமோட்டும் லைசென்ஸ் காலாவதியான 24 லட்சம் பேர் அந்த பெட்ரோலைப் பெறுவதற்குத் தகுதி இழந்துள்ளனர்.
இந்த 24 லட்சம் பேர், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தங்களின் வாகனமோட்டும் லைசென்ஸைப் புதுப்பிக்காததால் அவர்கள் மலிவான விலையில் கிடைக்கக்கூடிய பெட்ரோல் ரோன்95 எரிபொருளை வாங்க இயலாது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
எனினும் லைசென்ஸ் காலாவதியாகி மூன்று ஆண்டுகளுக்கு மேற்போகாமல் இருக்கும் 15 லட்சம் பேர், அவ்வகை பெட்ரோலை பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளனர் என்று அந்தோணி லோக் விளக்கினார்.








