ஈப்போ, டிசம்பர்.30-
தைப்பிங்கில் உள்ள தாமான் தாசெக் ஏரியில் மூழ்கியதாக நம்பப்படும் மூதாட்டி ஒருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
இன்று காலை ஏரிக்கரையில் மிதந்தபடி காணப்பட்ட 73 வயது மதிக்கத்தக்க அந்த மூதாட்டியின் சடலத்தை, பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவைச் சேர்ந்த அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து இன்று காலை 9 மணியளவில் கிடைத்த தகவலின் அடிப்படையில், தைப்பிங் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அதன் துணை இயக்குநர் ஷாஸ்லின் முஹமட் ஹனாஃபியா தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்ட சடலமானது விசாரணைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








