Dec 5, 2025
Thisaigal NewsYouTube
வடிகாலில் விழுந்து இரண்டு சிறுவர்கள் பலி
தற்போதைய செய்திகள்

வடிகாலில் விழுந்து இரண்டு சிறுவர்கள் பலி

Share:

ஷா ஆலாம், ஜூலை.19-

ஷா ஆலம், செக்‌ஷன் 24, ஜாலான் சிலி மேரா 24/26 அருகே உள்ள வடிகாலில் விழுந்து இரண்டு சிறுவர்கள் மூழ்கி உயிரிழந்தனர். 12 வயது சே ஷஸ்வான் இர்வான் ஷாவும் 9 வயது அர்ஷிடயான் அரிஜந்தோவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாக தீயணைப்பு - மீட்புப் படையின் சிலாங்கூர் மாநில செயல்பாச்சுப் பிரிவின் உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

நேற்று மாலை 7.19 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்ததும், ஷா ஆலம் தீயணைப்பு - மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சிறுவர்களின் உடல்கள் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு தற்போது மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Related News