கடந்த சனிக்கிழமை , 40 வயது ஆடவர் ஒருவர் தனது 74 வயதான தந்தையைக் கொலை செய்துள்ளார் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட ஆடவரிடம் போலீஸ் நடத்திய விசாரணையில் அடிகடி தம்னை கண்டித்து சத்தம் போட்ட தந்தையின் செயல் தாங்காது மண் அள்ளும் கருவி கொண்டு தந்தையை அந்த ஆடவர் தாக்கி உள்ளார் என தெரியவந்துள்ளது.
ஜாலான் பிஜேஎஸ்- பண்டார் சன்வேயில் அமைந்துள்ள இல்லத்தில், இரவு மணி 12க்கு மது அருந்துவதற்காக தந்தையிடம் பணம் கேட்டதால், தந்தை கண்டித்துள்ளார். அதனால் ஆத்திரமூண்ட அந்த 40 வயது ஆடவர் தந்தையை மண் அள்ளும் கருவியால் தாக்ககி திரை சீலை கொண்டு சுருட்டி வீட்டின் முன் உள்ள சாலையில் வீசி எரிந்தார் என விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் பெட்டாலிங் ஜெயா வட்டார போலீஸ் தலைவர் துணை கமிஸ்னர் முஹமாட் ஃபக்ருடின் அப்துல் ஹமிட் கூறினார்.
2 வருடங்களாக வேலைக்குச் செல்லாமல் குடி போதைக்கு அடிமையான அந்த 40 வயது ஆடவர் மீது வீட்டை உடைத்து களவாடியது மற்றும் ஆபத்தான ஆயுதம் வைத்திருந்த குற்றச்சாட்டுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.








