பெரிக்காத்தான் நேஷனல் தலைமையில் பாஸ் கட்சி, ஜோகூர் மாநிலத்தில் ஊடுருவதற்கும், அந்த மாநிலத்தை கைப்பற்றுவதற்கும் வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜோகூர், சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் ஒரு களமாக பயன்படுத்தப்படும் என்று பெரிக்காத்தான் நேஷனலின் தேர்தல் இயக்குநரும், கெடா மாநில மந்திரி பெசாருமான முகமட் சனூசி முகமட் நூர் தெரிவித்துள்ளார்.
வரும் இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிடும் அமானா வேட்பாளரை தோற்கடித்து, சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதியை பாஸ் கட்சி கைப்பற்றுமானால் ஜோகூர் மாநிலத்தை பாஸ் கட்சி கைப்பற்றுவது உறுதி என்று அவர் விளக்கினார்.
நாடு முழுவதும் பச்சை அலை வீசத் தொடங்கி விட்டது. இதில் ஜோகூர் மாநிலம் மட்டும் விதிவிலக்கு அல்ல என்று சனூசி குறிப்பிட்டார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


