சிரம்பான், டிசம்பர்.30-
கடந்த சனிக்கிழமை, நெகிரி செம்பிலான் மாநிலம், போர்ட்டிக்சன் நகரிலுள்ள லுகுட் பகுதியில் நடந்த ஆயுதமேந்திய மோதல் தொடர்பாக, 9 பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் 20 முதல் 40 வயதிற்கு இடைப்பட்ட ஆடவர்கள் என மாநில போலீஸ் தலைவர் அல்ஸாஃப்னி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவரைப் போலீசார் தேடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ஒரு குழந்தை உட்பட இந்த மோதலின் போது காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், இச்சம்பவத்திற்கான உண்மையான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக அல்ஸாஃப்னி தெரிவித்துள்ளார்.
இச்சம்பவமானது குற்றவியல் சட்டம் பிரிவு 326 மற்றும் 427-ன் இன் கீழ் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.








