கோலாலம்பூர், அக்டோபர்.07-
மலேசியா பாகிஸ்தான் இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பு, இரு நாடுகளுக்கு இடையில் பொருளாதார வாய்ப்புகளை விரிவுபடுத்தும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில் வர்த்தகம், முதலீடு மற்றும் ஹலால் தொழில்துறையின் மூலம் இஸ்லாமிய உலகின் ஒற்றுமையையும் வலுப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மலேசியா–பாகிஸ்தான் இடையில் நேற்று நடைபெற்ற பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தம் மூலமாக வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இரு நாட்டுத் தலைவர்களும் திருப்திடையடைந்துள்ளனர் என்றும் ஃபாமி ஃபாட்சீல் உறுதிபடுத்தியுள்ளார்.
பாகிஸ்தானின் உணவு உற்பத்தித் துறைகளின் தேவையைப் பூர்த்தி செய்ய பனை எண்ணெய் ஏற்றுமதியை அதிகரிக்க, மலேசியா முன்வந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ள அவர், ஹலால் துறையை விரிவுபடுத்துவதில் இரு நாடுகளும் தயாராக உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.








