புத்ராஜெயா, செப்டம்பர்.29-
நாட்டில் டயர் இறக்குமதியில் பல முறைகேடுகள் நடந்து வருவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து எஸ்பிஆர்எம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றது.
விலை நிர்ணயம், பாதுகாப்பற்ற இறக்குமதி மற்றும் வரி ஏய்ப்பு தொடர்பாக இவ்விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
ஆண்டுதோறும் சுமார் 300 கண்டெய்னர்களில், மலேசிய சாலைகளுக்குப் பொருந்தாத வகையிலான, கனரக வாகன டயர்கள், இறக்குமதி செய்யப்படுவதாக எஸ்பிஆர்எம் குறிப்பிட்டுள்ளது.
இதனால் மக்களுக்கு ஆபத்து ஏற்படுவதோடு, அரசாங்கத்தின் வருவாயிலும் ஆண்டுதோறும் சுமார் 70 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்படுவதாகவும் எஸ்பிஆர்எம் தெரிவித்துள்ளது.
அஃப்தா என்றழைக்கப்படும் ஆசியான் தடையற்ற வர்த்தகப் பகுதியைச் சேர்ந்த நாடுகளுக்கான, 40 சதவிகித வரியும், 10 சதவிகித விற்பனை வரியும் செலுத்தாமல், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 லட்சம் கனரக வாகனங்களின் டயர்கள் மலேசியாவில் இறக்குமதி செய்யப்படுவதாகவும் எஸ்பிஆர்எம் தெரிவித்துள்ளது.








