கோலாலம்பூர், செப்டம்பர்.18-
மலேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழக பலாப்ஸ் பயிற்சி மாணவர் ஷம்சுல் ஹரிஸ் ஷம்சுடின் மரணம் குறித்து விசாரணை தேவையா என்பதை முழு போலீஸ் விசாரணை அறிக்கையைப் பெற்ற பின்னர் தலைமை வழக்கறிஞர் மன்றம் முடிவு செய்யும் என்று டான் ஶ்ரீ டுசுகி மொக்தார் Dusuki Mokhtar தெரிவித்துள்ளார்.
போலீசாரிடமிருந்து இன்னும் முழுமையான அறிக்கையைப் பெறவில்லை என்றும், அவர்கள் இன்னும் மருத்துவமனையிலிருந்து இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கைக்காகக் காத்திருக்கிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதே வேளையில், பிரேத பரிசோதனை உட்பட முழு அறிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்று காவல்துறை கோரியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








