Oct 18, 2026
Thisaigal NewsYouTube

போர்ட் கிள்ளான் சாலை விரிவாக்கம், பேச்சுவார்த்தை நடத்தப்படும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
போர்ட் கிள்ளான் சாலை விரிவாக்கம், பேச்சுவார்த்தை நடத்தப்படும்

போர்ட் கிள்ளான்,செப்டம்பர் 27-

கிள்ளான், போர்ட் கிள்ளான் சாலையை விரிவுப்படுத்துவது மற்றும் மேம்படுத்துவது குறித்து போக்குவரத்து அமைச்சும், சிலாங்கூர் மாநில அரசும் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

அந்தப் பகுதியில் லோரி சம்பந்தப்பட்ட விபத்துகள் அடிக்கடி நிகழ்வது மற்றும் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைத் தொடர்ந்து அந்த சாலை விரிவுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

இவ்விவகாரத்திற்கு எவ்வாறு தீர்வு காண்பது, சாலையை எவ்வாறு விரிவுப்படுத்துவது என்பது குறித்து சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் போக்குவரத்து அமைச்சுடன் தாம் கலந்து ஆலோசிக்கவிருப்பதாக டத்தோஸ்ரீ அன்வார் தெரிவித்தார்.

கோலக்கிள்ளானில் இரண்டாவது Westports துறைமுகத்திற்கான பூமிவேலையை இன்று அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தப்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

போர்ட்கிள்ளான் சாலை விரிவாக்கத்திற்கான செலவினம் குறித்த விவரங்களை தற்போதைக்கு வெளியிட இயலாது என்று நிதியமைச்சரான டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கிள்ளான் பேரங்காடி வெடிகுண்டு மிரட்டல்: சந்தேகத்திற்குரிய பொருட்கள் இல்லை என போலீஸ் உறுதி

கிள்ளான் பேரங்காடி வெடிகுண்டு மிரட்டல்: சந்தேகத்திற்குரிய பொருட்கள் இல்லை என போலீஸ் உறுதி

சுகாதார அமைச்சின் 6,724 அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு

சுகாதார அமைச்சின் 6,724 அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு

டாக்சி, வாடகைக் கார், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு  1,000 ரிங்கிட் நிதி  உதவி! எஞ்சியவர்களுக்கான  தொகை வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும்

டாக்சி, வாடகைக் கார், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு 1,000 ரிங்கிட் நிதி உதவி! எஞ்சியவர்களுக்கான தொகை வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும்

மியன்மாருக்குச் சட்டவிரோதமாகத் திரும்ப முயன்ற 11 பேர் கைது

மியன்மாருக்குச் சட்டவிரோதமாகத் திரும்ப முயன்ற 11 பேர் கைது

சிறப்பு அனுமதி அட்டை வழங்குவதில் முறைகேடா? கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை விசாரணை

சிறப்பு அனுமதி அட்டை வழங்குவதில் முறைகேடா? கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை விசாரணை

கழுத்தில் அழுத்தம் ஏற்படுத்தப்பட்டதே சுங்கத்துறை பெண் அதிகாரியின் மரணத்துக்குக் காரணம்

கழுத்தில் அழுத்தம் ஏற்படுத்தப்பட்டதே சுங்கத்துறை பெண் அதிகாரியின் மரணத்துக்குக் காரணம்