Sep 12, 2026
Thisaigal NewsYouTube
தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு
தற்போதைய செய்திகள்

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

Share:

தியோமான் தீவு, பூலாவ் ரெங்கிஸ் அருகே “டிஸ்கவர் ஸ்குபா டைவிங்” நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 65 வயதான சபியா ஷியெக் என்பவர் படகில் ஏறும் போது தவறி கடலில் விழுந்து உயிரிழந்தார்.

இன்று காலை 9.50 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்த நிலையில், கடலுக்குள் விழுந்த அவரை முக்குளிப்புப் பயிற்றுநர் மீட்டெடுத்தார்.

எனினும் மயக்க நிலையில் மீட்கப்பட்ட அவர், பூலாவ் தியோமானில் உள்ள தெகெக் சுகாதார நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

குடும்பத்தினருடன் நான்கு நாள் விடுமுறைக்காக நேற்று தியோமான் வந்திருந்த சபியாவுக்கு முக்குளிப்பு உரிமம் இல்லை என்றும், சுமார் 7 மீட்டர் ஆழமுள்ள பகுதியில் இந்தச் சம்பவம் நடந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அவரது உடலானது குவாந்தானில் உள்ள தெங்கு அம்புவான் அஃப்ஸான் மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

Related News

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்