Sep 12, 2026
Thisaigal NewsYouTube
போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
தற்போதைய செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

Share:

கடந்த ஜூலை மாதம் ஜகார்த்தாவில் மலேசியா ஏர்லைன்ஸ் விமானி ஒருவர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் , தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு விமானியின் வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்துகளை போலீசார் முடக்கியுள்ளனர்.

இது குறித்து புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் ஹுசேன் ஓமார் கான் கூறுகையில், கைது செய்யப்பட்டுள்ள அந்த விமானி, மலேசியா ஏர்லைன்ஸ் விமானிக்கும், போதைப்பொருள் கும்பலுக்கும் இடையே இடைத்தரகராக செயல்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

அவர் அபாயகரமான போதைப் பொருள் சட்டம் 1985 -ன் கீழ் அந்த விமானி 60 நாட்கள் தடுத்து வைக்கப்படுவார் என்றும் ஹுசேன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த விமானியின் வங்கிக் கணக்குகள் மற்றும் பிற நிதிப் பதிவுகளைப் போலீசார் ஆய்வு செய்து வருவதாகவும், கணக்குகளில் உள்ள பணத்தின் அளவு குறித்து இதுவரை தகவல் வெளியிடப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்

இந்தோனேசியாவில் இணைய மோசடியில் 30 மலேசியர்கள் ஈடுபட்டது எப்படி? குற்றப் பின்னணியை ஆராய்கிறது மலேசியா

இந்தோனேசியாவில் இணைய மோசடியில் 30 மலேசியர்கள் ஈடுபட்டது எப்படி? குற்றப் பின்னணியை ஆராய்கிறது மலேசியா