Sep 12, 2026
Thisaigal NewsYouTube
30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி
தற்போதைய செய்திகள்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

Share:

ஸ்தாப்பாக் ஆயர் பானாஸ் பகுதியில் உள்ள இந்து ஆலயம் ஒன்றில் சுமார் 30 ஆண்டுகளாக சேவையாற்றி வந்த வி. ரெஜினா மேரி, தமது ஆலய உறுப்பினர் பதவி அநியாயமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

48 வயதான ரெஜினா, 2023-ஆம் ஆண்டு உறுப்பினராக ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன், 2025-ஆம் ஆண்டு ஆலய நிர்வாகக் குழுவில் இடம் பெறவும் பரிந்துரைக்கப்பட்டதாகத் தெரிவித்தார். ஆனால், ஜூன் 14-ஆம் தேதி கோயில் அறங்காவலர் ஒருவரைச் சுற்றி நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விளக்கம் கோரிய பின்னர், தமது சமயத் தகுதி கேள்விக்குள்ளாக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மறுநாள் ஸ்தாப்பாக் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், வழக்கு தற்போது நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் ரெஜினா குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து ஆலய நிர்வாகத்திடம் பலமுறை விளக்கம் கேட்டும் பதில் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி தனது உறுப்பினர் பதவி ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு கிடைத்ததாகவும், திருப்திகரமான விளக்கம் கிடைக்காவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் ரெஜினா தெரிவித்துள்ளார்.

இதனிடையே, உறுப்பினர் பதவி ரத்து செய்யப்பட்டதை ஆலயத் தலைவர் துரைசாமி ராமையா உறுதிப்படுத்தியுள்ளதுடன், மேலதிக கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார்.

Related News

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்

இந்தோனேசியாவில் இணைய மோசடியில் 30 மலேசியர்கள் ஈடுபட்டது எப்படி? குற்றப் பின்னணியை ஆராய்கிறது மலேசியா

இந்தோனேசியாவில் இணைய மோசடியில் 30 மலேசியர்கள் ஈடுபட்டது எப்படி? குற்றப் பின்னணியை ஆராய்கிறது மலேசியா

ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து அவசியம்: ஈரான் அதிபரிடம் அன்வார் வலியுறுத்து

ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து அவசியம்: ஈரான் அதிபரிடம் அன்வார் வலியுறுத்து

சிரம்பானில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்தது: 3 கார்கள் மண்ணில் புதைந்தன

சிரம்பானில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்தது: 3 கார்கள் மண்ணில் புதைந்தன