Sep 12, 2026
Thisaigal NewsYouTube
மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு
தற்போதைய செய்திகள்

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

Share:

ஜோகூரைச் சேர்ந்த பெர்சத்துவான் பெஙானுட் அகாமா இந்து சமயம் செகாமட் ஜோகூர் என்ற இந்து அமைப்பு, மானிய விண்ணப்பத்தை முதலில் அங்கீகரித்துவிட்டு பின்னர் நிராகரித்ததாகக் கூறி மலேசிய இந்திய உருமாற்றுப் பிரிவான மித்ராவுக்கு எதிராக கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

கடந்த 2025 -ஆம் ஆண்டு ஜூன் 6-ஆம் தேதி, அந்த அமைப்புக்கு மானியம் வழங்க மித்ரா ஒப்புதல் அளித்ததாக அந்த அமைப்பின் சட்ட ஆலோசகரும், வழக்கறிஞருமான மதன் ஆனந்தராம் தெரிவித்துள்ளார்.

பின்னர் சுராட் செதுஜு தெரிமா என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தேவையான ஆவணங்களை மித்ரா கோரியதாகவும், அந்த ஆவணங்களை அமைப்பு சமர்ப்பித்ததுடன் பலமுறை தொடர்பு கொண்டும் எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே இந்த வழக்கின் அடுத்த விசாரணை தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும், அடுத்த சில நாட்களில் தேதி கிடைக்கலாம் என்றும் மதன் ஆனந்தராம் தெரிவித்துள்ளார்.

Related News

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்

இந்தோனேசியாவில் இணைய மோசடியில் 30 மலேசியர்கள் ஈடுபட்டது எப்படி? குற்றப் பின்னணியை ஆராய்கிறது மலேசியா

இந்தோனேசியாவில் இணைய மோசடியில் 30 மலேசியர்கள் ஈடுபட்டது எப்படி? குற்றப் பின்னணியை ஆராய்கிறது மலேசியா