Sep 12, 2026
Thisaigal NewsYouTube
எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு
தற்போதைய செய்திகள்

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

Share:

கிழக்குக் கடற்கரை விரைவுச்சாலையில் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி 11 வாகனங்கள் மோதிய விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

இந்த விபத்தில் ஹோண்டா சிஆர்-வி காரை ஓட்டிச் சென்ற 18 வயது செபஸ்டியன் சியோ ஜென், 10 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.

அவரது தந்தை சியோ பெங் வாயின் உட்பட 4 பேர் ஏற்கனவே விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

தெமர்லோ பகுதியில் இரவு 10.44 மணியளவில் நடந்த இந்த விபத்தில் விரைவுப் பேருந்து, சிமென்ட் டேங்கர் லாரி உள்ளிட்ட 11 வாகனங்கள் மோதிக் கொண்டன. மேலும் பலர் காயமடைந்தனர்.

இதனிடையே, விபத்தில் படுகாயமடைந்த சிமென்ட் டேங்கர் லாரி ஓட்டுநர் 52 வயதான ஸுல்கர்னாயின் மாட் நோ மீது, 4 பேரின் உயிரிழப்புக்கு தொடர்புடையதாக நான்கு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் மீது நேற்று அக்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

Related News

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்