Oct 11, 2026
Thisaigal NewsYouTube

பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் சீனாவின் உறுதிப்பாட்டை மலேசியா மதிக்கிறது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் சீனாவின் உறுதிப்பாட்டை மலேசியா மதிக்கிறது

கோலாலம்பூர், மே.27-

பரஸ்பர நலனுக்காக ஜிசிசி எனப்படும் வளைகுடா ஒத்துழைப்பு மன்றம், சீனா மற்றும் ஆசியான் உச்ச நிலை மாநாட்டின் மூலம் வியூக ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக, சீனப் பிரதமர் லீ கியாங்குடன் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று கோலாலம்பூரில் நேரடி சந்திப்பை நடத்தினார்.

2025 ஆம் ஆண்டில் ஆசியான் தலைவராக மலேசியா பொறுப்பேற்ற நிலையில், பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில், குறிப்பாக தற்போதைய உலகளாவிய சவால்கள் மற்றும் புவிசார் அரசியல் மாற்றங்களை எதிர்கொள்வதில் சீனாவின் உறுதிப்பாட்டை தாம் பாராட்டுவதாக அன்வார் கூறினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது முக்கியம். குறிப்பாக கிழக்குக் கடற்கரை ரயில் இணைப்பு, தென் சீனக் கடலில் உள்ள சர்ச்சைகளைத் தீர்ப்பது, ஆசியான்-சீனா சுயேட்சை வர்த்தகப் பகுதி நெறிமுறை மேம்பாடு, ஹலால் தொழில் மற்றும் வர்த்தகம் போன்ற போக்குவரத்துத் திட்டங்கள் இதில் அடங்கும் என்று அன்வார் குறிப்பிட்டார்.

ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல், பொருளாதார ஒத்துழைப்பை இயக்குதல் மற்றும் பிராந்திய பிரச்சினைகளைத் தூதரக உறவு ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் நிவர்த்தி செய்தல் ஆகிய நோக்கங்களுடன் ஆசியானை வழிநடத்துவதில் மலேசியாவின் முயற்சிகள் இந்த 2025 ஆம் ஆண்டுக்கான ஆசியான் உச்ச நிலை மாநாடு பிரதிபலிக்கிறது என்று அன்வார் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை