கோலாலம்பூர், ஜனவரி.21-
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான வர்த்தக வரி குறித்த கவலைகள் மற்றும் புவிசார் அரசியல் அபாயங்களுக்கு மத்தியில், சந்தை நிலவரம் மேம்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்க டாலருக்கு நிகரான ரிங்கிட்டின் மதிப்பு உயர்வுடன் நிறைவடைந்தது.
Bank Muamalat Malaysia நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் அஃப்ஸானிஸாம் ரஷிட் கூறுகையில், உள்ளூர் நாணயமான ரிங்கிட், அமெரிக்க டாலருக்கு எதிராக நன்கு வலுப்பெற்று, இன்றைய வர்த்தக முடிவில் 0.14% வளர்ச்சி கண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அமெரிக்க டாலர் குறியீடு 0.04 விழுக்காடு சரிந்து 98.59 புள்ளிகளாக உள்ள நிலையில், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளை நோக்கி நகர்வதால் தங்கத்தின் விலை 1.99% உயர்ந்து ஒரு அவுன்ஸ் 4,858.11 அமெரிக்க டாலராக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
மலேசியாவின் பொருளாதாரத் தரவுகள் தொடர்ந்து வலுவாக இருப்பதால், சந்தை ஏற்ற இறக்கங்களை ரிங்கிட் சிறப்பாக எதிர்கொண்டு வருவதாக அஃப்ஸானிஸாம் குறிப்பிட்டார். இதன் காரணமாக, நாளை அறிவிக்கப்படவுள்ள OPR- வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன என்றும் அவர் கூறினார்.








