Oct 9, 2026
Thisaigal NewsYouTube

தனி அமைச்சின் கீழ் காவல் துறை – பரிந்துரைத்தார் காவல்துறைத் தலைவர் ரஸாருடின் ஹுசேன்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தனி அமைச்சின் கீழ் காவல் துறை – பரிந்துரைத்தார் காவல்துறைத் தலைவர் ரஸாருடின் ஹுசேன்

கோலாலம்பூர், ஜூன்.20-

அரச மலேசிய காவல்துறையை ஒரு தனி அமைச்சின் கீழ் கொண்டு வரப் பரிந்துரைத்துள்ளார் காவல்துறைத் தலைவர் ரஸாருடின் ஹுசேன். தற்போது உள்துறை அமைச்சின் கீழ் உள்ள 1 இலட்சத்து 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகளைக் கொண்ட இந்த இரண்டு நூற்றாண்டுகள் பழமையான படை, தனி அமைச்சின் கீழ் வந்தால் மிகவும் உறுதியாகவும் திறமையாகவும் செயல்படும் என்று அவர் நம்புவதாகக் குறிப்பிட்டார்.

சீனா, பிரேசில், வியட்னாம், தென் கொரியா, புருணை போன்ற பன்னாட்டு காவல் துறைகளும் இவ்வாறே செயல்படுகின்றன. தனது பதவிக்காலம் வரும் ஞாயிற்றுக்கிழமை முடிவடையவுள்ள நிலையில், இது தொடர்பான ஒரு முன்மொழிவு பிரதமரிடமும் உள்துறை அமைச்சரிடமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ரஸாருடின் ஹுசேன் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →