Dec 4, 2025
Thisaigal NewsYouTube
பெண்ணிடம் ஆபாசச் சேட்டை, நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார் ஆடவர்
தற்போதைய செய்திகள்

பெண்ணிடம் ஆபாசச் சேட்டை, நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார் ஆடவர்

Share:

பட்டர்வொர்த், ஜூலை.28-

17 வயது பெண்ணிடம் ஆபாசச் சேட்டைப் புரிந்ததாக குடிநீர் சுத்திகரிப்பு முகவர் ஒருவர், பட்டர்வொர்த் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

35 வயது மாஹ்மாட் ஜெஃப்ரி மாட் நோ என்ற அந்த நபர், நீதிபதி ஸுல்ஹஸ்மி அப்துல்லா முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த ஜுலை 21 ஆம் தேதி மாலை 4.50 மணியளவில் பினாங்கு, தாசேக் குளுகோர், தாமான் செம்பெடாக்கில் உள்ள ஒரு வீட்டில் அவர் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த நபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News