நாட்டில் வெப்ப நிலை உயர்ந்து கொண்டே வருவதால் பெற்றோர்கள் பிள்ளைகளை வாகனத்தினுள் விட்டு செல்ல வேண்டாம் என மலேசிய பொது சுகாதார அமைப்பின் ஆலோசகர் டத்தோ டாக்டர் சைனால் கேட்டுக் கொண்டுள்ளார்.
குழந்தைகளை வாகனத்தினுள் விட்டு செல்வதால் வெப்பம் தாங்காமல் அவர்களுக்கு வெப்ப பக்கவாதம் நோய் ஏற்பட அதிக சாத்தியம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
அதிகரித்து வரும் இந்த வெப்ப உஷ்ணநிலை சூழலை பொதுமக்கள் எளிதாக எடுத்துக் கொள்ள கூடாது என்றும் அதிக நீர் பருகி உடலின் வெப்பத்தை சீராக வைத்துக் கொள்ளுமாறும் அவர் ஆலோசனை வழங்கினார்.








