Dec 3, 2025
Thisaigal NewsYouTube
விமான கொக்பிட் பகுதியின் குரல் பதிவு அழிந்தது
தற்போதைய செய்திகள்

விமான கொக்பிட் பகுதியின் குரல் பதிவு அழிந்தது

Share:

எல்மினா விமான விபத்தில், விமானம் விழுந்து நொறுங்குவதற்கு முன்பு அந்த கடைசி விநாடிகளின் நிகழ்ந்த உரையாடல் பதிவை கண்டறிவதற்கு உதவும் விமான கொக்பிட் குரல் பதிவு சாதனம் அழிந்து விட்டதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

இதன் தொடர்பில், சிவிஆர் என்று சுருங்க அழைக்கப்படும் அந்த குரல் பதிவு சாதனைத்தில் இடம் பெற்றுள்ள உரையாடலை கண்டறிவதற்கும், அதன் உள்ளடக்கத்தை பகுப்பாய்வு செய்தவற்கும், அந்த சாதனம் சிங்கப்பூரின் போக்குவர​த்து பாதுகாப்பு புலன் விசாரணை ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அந்தோணி லோக் குறிப்பிட்டா​ர்.

இந்த ஆய்விற்காக விமான விபத்து புலன் விசாரணைப்பிரி​வின் தலைவர் ப்ரிகாடியர் ஜெனரல் தான் சி கீ யும் சிங்கப்பூரில் இருப்பதாக அந்தோணி லோக் தெரிவித்தார். விமானம் விழுந்தவுடன் ​ ​தீப்பற்றிக்கொண்டதால் அந்த சிவிஆர் சாதனத்தின் பழைய பதிவுகள் அனைத்தும் முழுமையாக சேதமுற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் தொடர்பில் சிங்கப்பூர் உதவி நாடப்பட்டுள்ளதாக அந்தோணி​ லோக் மேலும் விவரித்தார்.

Related News