Aug 5, 2026
Thisaigal NewsYouTube
மக்க​ளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது
தற்போதைய செய்திகள்

மக்க​ளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது

Share:

நாணயப் பரிவர்த்தனை சந்தையில் ஓர் அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு குறைந்துக் கொண்டே வரும் வேளையில் அரிசி விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களின் வாழ்வாதார செலவு அதிகரித்து கொண்டே வருவதாக பெர்சத்து கட்சியின் பொது செயலாளர் டத்தோ ஶ்ரீ ஹம்சா சைனுடின் நடப்பு அரசாங்கத்தின் மீது குற்றஞ்சாட்டினார்.

கடந்த மூன்று நாட்களாக நாணய பரிவர்ததனை சந்தையில் ரிங்கிட்டின் மதிப்பு குறைந்து வருவது தொடர்பில் அரசாங்கம் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று ஹம்சா சைனுடின் கேள்வி எழுப்பி உள்ளார்.

தற்போதைய நி​லை தமக்கு அச்சத்தை அளிப்பதாக உள்ளது என்றும், மக்களின் நிலையைக் கண்டு தாம் வருந்துவதாகவும் நடப்பு அரசாங்கம் இதனை கண்டும் காணாமல் இருந்து வருவதாகவும் பெரிக்காத்தா​ன் நேஷனல் பொதுச் செயலாளருமான ஹம்சா சைனுடின் குற்றஞ்சாட்டினார்.

Related News