பெட்டாலிங் ஜெயா, தாமான் பராமவுண்ட், எல்.ஆர்.டி நிலையத்தில் ரயில் இருப்புப் பாதையில் தவரி விழுந்த தமது இயர்போன் தொடர்பு சாதனத்தை எடுக்க முற்பட்ட, 23 வயதுடைய ஆடவரின் செயலினால் எல்.ஆர்.டி ரயில் சேவை சில நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டது.
நேற்று திங்கட்கிழமை நடந்த இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஆடவரின் செயல் அபாயகரமானது என்பதால், அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
பின்னர், அந்த நபர் 1991 ரயில் போக்குவரத்து சட்டம் பிரிவின் கீழ், பெட்டாலிங் ஜெயா நீதிமன்றத்தில் இன்று குற்றஞ் சாட்டப்பட்டதாக, மாவட்ட போலீஸ் தலைவர் எ.சி.பி. முகமது பக்ருடின் அப்துல் காதர் தெரிவித்தார். காலை 8.09 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தினால் பிளேட்பாரம் 1 இல் ரயில் சேவை மூன்று நிமிடங்கள் நிலைக்குத்தியதாக அவர் குறிப்பிட்டார்.








