Mar 27, 2026
Thisaigal NewsYouTube
டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி
தற்போதைய செய்திகள்

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

Share:

டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ள போதிலும், பினாங்கு மாநிலத்தில் தினசரி மேற்கொள்ளப்படும் குப்பை சேகரிப்புப் பணிகளில் எவ்விதக் குறைப்பும் இருக்காது என்று முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி அளித்துள்ளார்.

இன்று குவீன்ஸ்பே மால்- லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டீசல் விலை லிட்டருக்கு 5 ரிங்கிட் 52 சென்னாக உயர்ந்துள்ளதால், குப்பை சேகரிக்கும் ஒப்பந்ததாரர்களுக்கு கூடுதல் செயல்பாட்டுச் செலவுகள் ஏற்படும் என்பதை ஒப்புக்கொண்டார்.

"டீசல் விலை உயர்வால் லங்காவி படகு சேவைகள் குறைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. ஆனால், குப்பை சேகரிப்பு விவகாரத்தில் அத்தகைய குறைப்புகளைச் செய்ய முடியாது. குப்பைகள் திட்டமிட்டபடி சரியான நேரத்தில் சேகரிக்கப்பட வேண்டும்.

இதனால் ஏற்படும் கூடுதல் செலவினங்களை ஊராட்சி மன்றங்களே ஏற்க வேண்டியிருக்கும். மேலும், டீசல் ம் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, ஒப்பந்ததாரர்கள் தங்களது சேவைக்கான கட்டணத்தை உயர்த்தி வழங்கக் கோருவதற்கு தற்போதுள்ள ஒப்பந்த விதிகளில் இடமுண்டு என்றும் சாவ் கோன் இயாவ் குறிப்பிட்டார்

Related News