May 22, 2026
Thisaigal NewsYouTube
கோழி முட்டைகளின் சில்லரை விலை 3 சென் குறைக்கப்படுகின்றது
தற்போதைய செய்திகள்

கோழி முட்டைகளின் சில்லரை விலை 3 சென் குறைக்கப்படுகின்றது

Share:

நாடு முழுவதும், A,B,C GRED-ட்டுகளிலான கோழி முட்டைகளின் சில்லரை விலைகளில், 3 சென்களை குறைக்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.

அதன் படி, A GRED முட்டை 42 சென்னாகவும் B GRED முட்டை 40 சென்னாகவும் C GRED முட்டை 38 சென்னாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள வேளை இன்று தொடங்கி அது அமலாக்கம் காண்பதாக, பிரதமர் DATUK SERI ANWAR IBRAHIM அறிவித்துள்ளார்.

நடப்பில், கோழிகளுக்கான தீவணத்தின் விலைகள் குறைந்துள்ளதால், அதன் முட்டைகளை தருவிக்கும் நிறுவனங்களின் செலவுகளும் குறைந்துள்ளன.

அதன் அடிப்படையிலேயே, அரசாங்கம் அந்த விலை குறைப்பை மேற்கொண்டுள்ளது.அது தவிர, மக்களுக்கான உதவித்தொகைகளை மறுசீரமைக்கும் நடவடிக்கைகளால் மிச்சப்படுத்தப்படுத்தும் நிதிகளை, மக்களுக்கே திருப்பியளிக்கும் நடவடிக்கையாகவும் அது அமைவதாக நிதியமைச்சருமான ANWAR கூறினார்.

Related News