நேற்று வெள்ளிக்கிழமை ரவாங், ஜாலான் பத்து ஆராங் சாலையில் கார் ஒன்றினால் மோதப்பட்ட ஓர் இந்தியப் பிரஜை உயிரிழந்தார். இரவு 9.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் 42 வயது இந்தியப் பிரஜை சம்பவ இடத்திலேயே மாண்டதாக கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் எசிபி ஸைனால் முகமட் தெரிவித்தார்.
போலீசார் மேற்கொண்ட பூர்வாங்க விசாரணையில் கார் ஒன்று வழித்தடத்திலிருந்து விலகி, மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்த வழித்தடத்தில் நுழைந்து அந்த மோட்டார் சைக்கிளோட்டியை மோதியதாக எசிபி ஸைனால் குறிப்பிட்டார். இந்த விபத்தில் மொத்தம் நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்டிருந்ததாக எசிபி ஸைனால் விவரித்தார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


