ஜார்ஜ்டவுன், ஜூலை.28-
செயற்கை நுண்ணறிவுக் கூறுகளுடன் திவேட் கல்வித் திட்டத்தைப் பலப்படுத்த மனித வள அமைச்சு இலக்கு கொண்டுள்ளது என்று அதன் அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்துள்ளார்.
மனித வள அமைச்சு தற்போதைய எதிர்கால வேலைச் சந்தையின் தேவைகளை எதிர்கொள்ள தொழிலாளர்களைத் தயார்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். இதன் அடிப்படையில் திவேட் கல்வித் திட்டத்தின் மூலம் நாட்டின் மனித மூலதனத்தின் வளர்ச்சியை வலுப்படுத்த உறுதிப் பூண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் தொழில்துறை புரட்சி 4.0இன் தேவைகளுக்கு ஏற்ப இது மேற்கொள்ளப்படும். அமைச்சின் மேற்பார்வையின் கீழ் உள்ள தொழில்நுட்ப திவேட் நிறுவனங்களில் திறன் படிப்புகளுக்கான பாடத் திட்டத்தைச் செயற்கை நுண்ணறிவுக் கூறுகளைச் சேர்க்க மதிப்பாய்வு செய்வதும் இதில் அடங்கும் என்று ஸ்டீவன் சிம் விளக்கினார்.








