Sep 24, 2026
Thisaigal NewsYouTube
ஜாஹிட் ஹமிடி டிஎன்ஏஏ விவகாரம்: வழக்கறிஞர்கள் மன்றத்தின் சவாலுக்கு எதிரான மேல்முறையீடு அக்டோபர் 8-இல் விசாரணை
தற்போதைய செய்திகள்

ஜாஹிட் ஹமிடி டிஎன்ஏஏ விவகாரம்: வழக்கறிஞர்கள் மன்றத்தின் சவாலுக்கு எதிரான மேல்முறையீடு அக்டோபர் 8-இல் விசாரணை

Share:

யாயாசான் அல்புகாரி ஊழல் வழக்கில் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடிக்கு வழங்கப்பட்ட 'விடுதலை செய்யப்படாமல் விடுவிக்கப்பட்ட' டிஎன்ஏஏ உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர்கள் மன்றம் நீதிமன்றத்தை நாடியுள்ளது. அதற்கு எதிராக சட்டத்துறை தலைவர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் அக்டோபர் 8-ஆம் தேதி கூட்டரசு நீதிமன்றத்தில் நடைபெறும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற வழக்கு நிர்வாகத்தின்போது, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் தங்களின் எழுத்துப்பூர்வ வாதங்களை வரும் செப்டம்பர் 23-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனத் துணைப் பதிவாளர் ரஹீமா ரஹீம் உத்தரவிட்டுள்ளார். இந்தத் தேதியை மூத்த கூட்டரசு வழக்கறிஞர் அகமத் ஹனீர் மற்றும் வழக்கறிஞர்கள் மன்றத்தின் பிரதிநிதி அபிலாஷ் சுப்ரமணியம் ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சட்டத்துறை தலைவர் டான்ஸ்ரீ டுசுகி மொக்தார் மற்றும் ஜாஹிட் ஹமிடி தரப்பு, இந்த விவகாரம் பொதுநலன் சார்ந்த முக்கியச் சட்டக் கேள்விகளை எழுப்புவதாகக் கூறி, முந்தைய உயர் நீதிமன்றத்தின் தள்ளுபடி தீர்ப்பை நிலைநிறுத்தக் கோரி தனித்தனியே மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இந்த இரு மனுக்களும் ஒரே நாளில் விசாரிக்கப்படவுள்ளன.

Related News