Jul 15, 2026
Thisaigal NewsYouTube
ஏர்போர்னியோ அதிரடி: கோலாலம்பூர்-கூச்சிங் ஒருவழிப் பயணம் ஆண்டு முழுவதும் 375 ரிங்கிட் மட்டுமே
தற்போதைய செய்திகள்

ஏர்போர்னியோ அதிரடி: கோலாலம்பூர்-கூச்சிங் ஒருவழிப் பயணம் ஆண்டு முழுவதும் 375 ரிங்கிட் மட்டுமே

Share:

விமானக் கட்டணங்களை நிலைப்படுத்தவும் , குறிப்பாக சரவாக் மாநில மக்களுக்குப் பயனளிக்கும் வகையிலும், கோலாலம்பூர் - கூச்சிங் வழித்தடத்திற்கான ஒருவழி விமானக் கட்டணத்தை ஆண்டு முழுவதும் 375 ரிங்கிட்டாக ஏர்போர்னியோ விமான நிறுவனம் தக்கவைத்துக் கொள்ளவுள்ளது.

கடந்த ஆறு மாத கால விமானக் கட்டணத் தரவுகள், எரிபொருள் விலை ஏற்ற இறக்கங்கள் மற்றும் இதர விமான நிறுவனங்களின் கட்டண ஒப்பீடுகளுக்குப் பிறகே இந்த 375 ரிங்கிட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி மேகாட் ஆர்டியன் வீரா அமினுடின் இன்று தெரிவித்தார்.

சிப்பாங், கேஎல்ஐஏ டெர்மினல் 1 மற்றும் கூச்சிங் அனைத்துலக விமான நிலையம் இடையே தினமும் இருமுறை இந்தச் சேவை இயக்கப்படுகிறது. இதன் தொடக்கமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "சரவாக்கு சாயாங்" திட்டத்தின் கீழ், அனைத்துக் கட்டணங்களும் உள்ளடங்கிய எகனாமி வகுப்பு ஒருவழிப் பயணக் கட்டணம் 375 ரிங்கிட்டாகவும் , வர்த்தக வகுப்பு கட்டணம் 736 ரிங்கிட்டாகவும் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related News