Jul 16, 2026
Thisaigal NewsYouTube
எரிபொருள் விலை நிலவரம்: ரான்97, ரான்95 மற்றும் டீசல் விலை மாற்றம் இன்றி நீடிப்பு
தற்போதைய செய்திகள்

எரிபொருள் விலை நிலவரம்: ரான்97, ரான்95 மற்றும் டீசல் விலை மாற்றம் இன்றி நீடிப்பு

Share:

நாளை ஜூலை 9 ஆம் தேதி முதல் ஜூலை 15 ஆம் தேதி வரையிலான வாராந்திர நிலவரப்படி, மானியமற்ற பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விலைகள் தற்போதைய நிலையிலேயே நீடிக்கும் என அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.

அதன்படி, மானியமற்ற ரான்97 பெட்ரோல் ஒரு லிட்டர் 4 ரிங்கிட்டாகவும், ரான்95 பெட்ரோல் ஒரு லிட்டர் 3 ரிங்கிட் 37 சென்னாகவும், மற்றும் டீசல் விலை ஒரு லிட்டர் 3 ரிங்கிட் 97 சென்னாகவும் மாற்றம் இன்றி அப்படியே நீடிக்கின்றன.

அதேவேளையில், பூடி95 திட்டத்தின் கீழ் மானிய விலையிலான ரான்95 பெட்ரோல் ஒரு லிட்டர் 1 ரிங்கிட் 99 சென்னாகவும், பூடி டீசல் திட்டத்தின் கீழ் மானிய டீசல் ஒரு லிட்டர் 2 ரிங்கிட் 10 சென்னாகவும் தொடர்ந்து விற்பனை செய்யப்படும். மேலும், மானியக் கட்டுப்பாட்டு முறையின் கீழ் பெட்ரோல் ஒரு லிட்டர் 2 ரிங்கிட் 5 சென்னாகவும், டீசல் ஒரு லிட்டர் 2 ரிங்கிட் 15 சென்னாகவும் எவ்வித மாற்றமும் இன்றி அதே விலையில் நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News