கோலாலம்பூர், செப்டம்பர்.27-
பெட்ரோல் ரோன் 95 எரிபொருள், சலுகை விலையில் கிடைக்கும் புடி 95 திட்டம் இன்று போலீஸ்காரர்களுக்கு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது குறித்து போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில், மடானி அரசாங்கத்துற்குத் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
புடி 95 அமல்படுத்தப்பட்டது மூலம் அரச மலேசிய போலீஸ் படை மற்றும் மலேசிய ஆயுதப்படை மீதான அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த ஆதரவையும் பாராட்டையும் காட்டுகிறது என்று ஐஜிபி வர்ணித்தார்.
இந்த முயற்சியானது அரச மலேசிய போலீஸ் படை பணியாளர்களுக்கு உற்சாகத்தையும் உந்துதலையும் தருகிறது. இதனால் மக்களின் நல்வாழ்வு மற்றும் தேசிய இறையாண்மைக்காக போலீஸ் படை மேலும் திறனுடன் செயல்படுவதற்கான ஓர் உந்துதலை ஏற்படுத்துகிறது என்று காலிட் இஸ்மாயில் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.








