Oct 17, 2026
Thisaigal NewsYouTube

சமய, இனதுவேஷ விவகாரங்கள், துடைத்தொழிக்கப்பட வேண்டும்- சுல்தான் நஸ்ரின்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சமய, இனதுவேஷ விவகாரங்கள், துடைத்தொழிக்கப்பட வேண்டும்- சுல்தான் நஸ்ரின்

கோலகங்சார், நவ. 9-


மலேசியாவின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் அச்சுறுத்தக்கூடிய அரசியல் பயன்பாட்டு பொருளாக பிரயோகிக்கப்படும் சமய மற்றும் இனம் தொடர்புடைய சர்ச்சைகள் ஒடுக்கப்பட வேண்டும் என்று மேன்மைத் தங்கிய பேரா சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷா கேட்டுக்கொண்டார்.

சமயம் மற்றும் இனம் ஆகியவற்றின் பெயரில் தங்களின் அரசியல் லாபத்திற்காக ஆத்திரமூட்டும் வகையில் அவ்விவகாரங்களை ஒரு செல்லத்தக்க நாணயமாக பயன்படுத்தப்படுவது ஒடுக்கப்பட வேண்டும் என்று சுல்தான் நஷ்ரின் வலியுறுத்தினார்.

இது போன்ற செயல்கள் உடனடியாக ஒடுக்கப்படவில்லை என்றால் அவை ஒரு ஒரு தீப்பொறி போல் கிளம்பி, நாட்டை அழிக்கக்கூடிய பெரும் எதிரியாகி விடும் என்று சுல்தான் நினைவுறுத்தினார்.

இன்று சனிக்கிழமை பேரா, கோலகங்சார், இஸ்தானா இஸ்கண்டாரியாவில் தமது 68 ஆவது பிறந்த தின விழாவை முன்னிட்டு பிரமுகர்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்கும் நிகழ்வில் மேன்மைத் தங்கிய பேரா சுல்தான் இந்த நினைவுறுத்தலை வழங்கினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →