கோத்தா கினபாலு, செப்டம்பர்.19-
தனது வீட்டின் முன்புறம் அடையாளம் தெரியாத நபர்களால் சிவப்புச் சாயம் வீச்சு நடத்தப்பட்டுள்ளதாக சபா மாநில பாஸ் தலைவர் அலிஅக்பார் குலாசான் இன்று போலீசில் புகார் செய்துள்ளார்.
தாம் உட்பட தமது குடும்பத்தினரின் தனிப்பட்ட பாதுகாப்பை உறுதிச் செய்யும் அதே வேளையில் இது குறித்து போலீசார் விரிவான விசாரணை மேற்கொள்வதற்கு ஏதுவாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அலிஅக்பார் குலாசான் குறிப்பிட்டார்.
அதிகாலையில் நடந்த இந்தத் தாக்குதல் தொடர்பில் கோத்தா கினபாலு, அலாம் மெஸ்ரா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து இருப்பதாக அவர் தெரிவித்தார்.








