பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இன்று செவ்வாய்க்கிழமை, இரவு, ஜலீல் ஹில், ஆக்சியாட்டா அரங்கம் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு தங்களின் பிளவுப்படாத ஆதரவை பாலஸ்தீன மக்களுக்கு தெரிவித்துக்கொண்டனர்.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கடல் அலையைப் போல் திரண்ட மக்கள், இந்த மாபெரும் நிகழ்வில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான போரில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக ஒன்றுபட்டு நிற்க அவர்கள் உறுதி பூண்டனர்.
Himpunan Bersama Palestne என்ற இந்தப் பேரணியில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் முதன்மையான உரை இடம் பெற்ற நிலையில் வெள்ளைநிற ஆடையில் அரங்கம் நிறைந்து காணப்பட்ட மக்கள், பாலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் கொடூர தாக்குதலை கண்டித்தனர்.








