Nov 16, 2026
Thisaigal NewsYouTube

இபிஎப் முதலீட்டு வருமானம் 30 விழுக்காடு அதிகரிப்பு – ஒன்பது மாதங்களில் 83.32 பில்லியன் ரிங்கிட்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இபிஎப் முதலீட்டு வருமானம் 30 விழுக்காடு அதிகரிப்பு – ஒன்பது மாதங்களில் 83.32 பில்லியன் ரிங்கிட்

ஊழியர் சேமநிதி வாரியமான இபிஎப் 2026ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 83.32 பில்லியன் ரிங்கிட் முதலீட்டு வருமானத்தைப் பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 30 விழுக்காடு அதிகமாகும்.

மூன்றாவது காலாண்டில் மட்டும் முதலீட்டு வருமானம் 3 விழுக்காடு உயர்ந்து 25.82 பில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது.

உலகளாவிய பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்கள் மற்றும் பத்திரச் சந்தையில் அதிகரிக்கும் வருவாய் விகிதங்கள் காரணமாக, அடுத்த காலாண்டில் முதலீட்டு வளர்ச்சி மிதமாக இருக்கலாம் என இபிஎப் தலைமைச் செயல்முறை அதிகாரி அஹ்மாட் ஸுல்கார்நாயின் ஓன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, செப்டம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி இபிஎப்.பின் மொத்த முதலீட்டுச் சொத்துகள் 1.55 டிரில்லியன் ரிங்கிட்டாக அதிகரித்துள்ளன.

மேலும், இவ்வாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் சுமார் 6 லட்சத்து 59 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளதாகவும் இபிஎப் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
மாண்டிரி ஒருங்கிணைப்பாளர் மீதான பயணத் தடையை உடனடியாக நீக்க வேண்டும் – 37 அரசு சாரா அமைப்புகள் கோரிக்கை

மாண்டிரி ஒருங்கிணைப்பாளர் மீதான பயணத் தடையை உடனடியாக நீக்க வேண்டும் – 37 அரசு சாரா அமைப்புகள் கோரிக்கை

கேபிள் திருட்டால் இடிஎஸ் ரயில் தாமதம் – பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இழப்பீடு வழங்க எம்பி கோரிக்கை

கேபிள் திருட்டால் இடிஎஸ் ரயில் தாமதம் – பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இழப்பீடு வழங்க எம்பி கோரிக்கை

கோலாலம்பூரில் திடீர் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் – பிரதமரிடம் அறிக்கை சமர்ப்பிக்க டிபிகேஎல்லுக்கு உத்தரவு

கோலாலம்பூரில் திடீர் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் – பிரதமரிடம் அறிக்கை சமர்ப்பிக்க டிபிகேஎல்லுக்கு உத்தரவு

இசிஆர்எல் ரயில் கட்டணச் சலுகையை பி40 மக்களுக்கும் விரிவுபடுத்த அரசாங்கத்திடம் கோரிக்கை

இசிஆர்எல் ரயில் கட்டணச் சலுகையை பி40 மக்களுக்கும் விரிவுபடுத்த அரசாங்கத்திடம் கோரிக்கை

நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தைக் கேலி செய்த துணை அமைச்சர் – பதவி விலக வேண்டும்

நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தைக் கேலி செய்த துணை அமைச்சர் – பதவி விலக வேண்டும்

உள்ளூர் வழிகாட்டிச் செயலியான துஜுவுக்கு சில நாட்களில் 10 லட்சத்துக்கும் அதிகமான பயனர்கள்

உள்ளூர் வழிகாட்டிச் செயலியான துஜுவுக்கு சில நாட்களில் 10 லட்சத்துக்கும் அதிகமான பயனர்கள்